காளை மாடு தூக்கி வீசியதில் முதியவர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா பகுதியில் பிரபல
இனிப்பு கடையின் உரிமையாளரான மோதிலால் அகர்வால் என்பவர் வீட்டிற்கு வெளியே நடந்து சென்றபோது தெருவில் சுற்றி கொண்டிருந்த காளை மாடு கொம்புகளால் தூக்கி தரையில் வீசியது. சுமார் 5 அடி உயரத்திற்கு காற்றில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த மோதிலால் அகர்வால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் விரக்தி அடைந்த பொதுமக்கள், உறுதியான நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
Next Story
