

பெட்ரோல் , டீசல் விலை உயர்வால் கட்டுமானப்பொருட்கள் விலை உச்சத்தை தொட்டுள்ளது
இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் சிமென்ட், கம்பி, மணல், ஜல்லி, செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். சிமெண்ட் விலை மூட்டைக்கு 100 ரூபாய் அதிகரித்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கட்டுமானத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்,. இதனால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்,. மேலும் சிமென்ட் தவிர, கம்பியின் விலையும் 60 ரூபாயில் இருந்து 76 ரூபாயாக உயர்ந்துள்ளதால் கட்டுமானத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்