நேபாளத்தில் நிலநடுக்கம்.. இந்தியாவில் தாக்கம்.. பீதியில் மக்கள்
நேபாளத்தில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. சிந்துபல்சோக் (Sindhupalchok) என்ற இடத்தில் ஏற்பட்ட நில நடுக்கம், ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கம் இந்தியாவில் பாட்னா, சிலிகுரி உள்ளிட்ட இடங்களிலும் உணரப்பட்டது. இதனிடையே, பாகிஸ்தானிலும் ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவான நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
