கர்நாடக மக்களுக்கு நல்லது நடக்கும் - தசரா விழாவில் முதலமைச்சர் குமாரசாமி உறுதி...

கர்நாடக மாநிலம் மைசூருவில் இன்று தொடங்கி 19ம் தேதி வரை தசரா விழா நடைபெறுகிறது.
கர்நாடக மக்களுக்கு நல்லது நடக்கும் - தசரா விழாவில் முதலமைச்சர் குமாரசாமி உறுதி...
Published on

விழாவின் தொடக்க நாளான இன்று, சிறப்பு விருந்தினராக பிரபல எழுத்தாளர் சுதா மூர்த்தி பங்கேற்று தசராவை தொடங்கி வைத்தார். மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் நடைபெற்ற விழாவில், தசரா ஜோதியை அவர் ஏற்றி வைத்தார்.

"கர்நாடக மக்களுக்கு நல்லது நடக்கும்" - தசரா விழாவில் முதலமைச்சர் குமாரசாமி உறுதி

10 நாட்கள் நடைபெற உள்ள தசரா விழாவைக் காண, உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனால், 10 நாட்களும் மைசூரு நகரம் விழாக்கோலம் பூண்டிருக்கும். தொடக்க விழாவில் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, தசராவுக்கு பிறகு, கர்நாடக மக்களுக்கு நல்லது நடக்கும் என கூறினார். சாமுண்டீஸ்வரி அருளால், கர்நாடக மக்களுக்கு தமது அரசு அனைத்தையும் செய்து வருவதாகவும் விவசாயிகள் யாரும் தற்கொலை முடிவுக்கு செல்லக் கூடாது எனவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com