

* மைசூரு தசரா விழாவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி உண்மையில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, இளைஞர்கள் சிலர் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, ME TOO அமைப்பில் பெண் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், அந்த பெண் குறிப்பிட்டது போல் எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தனர்.
* இருப்பினும் இது தொடர்பாக யாரேனும் காவல்நிலையத்தில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மைசூரு காவல் ஆணையர் சுப்ரமணியேஷ்வர ராவ் உத்தரவிட்டுள்ளார்.