காவல்நிலையத்தில் தீக்குளித்த மது போதை ஆசாமி

x

தெலங்கானா மாநிலத்தில் மது போதையில் இருந்த நபர் காவல்நிலையத்தில் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நலகொண்டா நகர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நரசிங்கா என்ற நபர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்த நிலையில், போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த நரசிங்கா, தன் மீது வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நான் யார் தெரியுமா என கேட்டபடி, மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்