Drugs | Police | Punjab | ஹெராயின் பயன்படுத்தியதாக காவல் உதவி ஆய்வாளர் - பொதுமக்கள் வாக்குவாதம்

ஹெராயின் பயன்படுத்தியதாக காவல் உதவி ஆய்வாளர் - பொதுமக்கள் வாக்குவாதம்

Drugs | Police | Punjab | ஹெராயின் பயன்படுத்தியதாக காவல் உதவி ஆய்வாளர் - பொதுமக்கள் வாக்குவாதம் #Drugs #Police #Punjab பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டம் புத்லாடா நகரில், ஹெராயின் போதைப்பொருள் பயன்படுத்தியதாக காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் பொதுமக்களிடம் சிக்கினார். ஐ.டி.ஐ. சந்திப்பில் பணியில் இருந்த சஹஜ்பிரீத் சிங் என்ற அந்த காவலர், போதையில் இருந்ததாகக் கூறி பொதுமக்கள் அவரைச் சூழ்ந்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவருக்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில், மார்பின் பாதிப்பு உறுதியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

X