இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்களாக சினிமா உலகத்துக்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்குமான தொடர்புகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. சுஷாந்த்தின் காதலியான ரியா சக்கரவர்த்தியை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வாக்கு மூலம் எனக் கூறி இணைய தளத்தில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதாவது தமிழில் கார்த்தியின் தீரன் படத்தில் நடித்த நடிகை ரகுல்பிரீத்சிங்கின் பெயரை போதைப் பொருள் பெறும் வாடிக்கையாளர்கள் பட்டியலில் ரியா குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.