அபுதாபி பட்டத்து இளவரசருடன் சந்திப்பு - மகிழ்ச்சியோடு வரவேற்ற ஜனாதிபதி

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை, அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சந்தித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூன்றாவது தலைமுறை தலைமையை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான இந்தியாவின் விரிவான உத்திசார் கூட்டாண்மையுடன் நீண்டகால பாரம்பரியம் தொடர்வதாக குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். அமீரக சமுதாயத்தின் அனைத்து அம்சங்களிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பது குறித்து குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com