மதுரையில் அமித்ஷா தங்கியிருந்த ஹோட்டல் அருகே பறந்த ட்ரோனால் பரபரப்பு

x

மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்கியுள்ள தங்கும் விடுதி அருகே தடையை மீறி நீண்ட நேரமாக ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமித்ஷாவின் மதுரை வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் தங்கியுள்ள விடுதி அருகே, மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவை மீறி ட்ரோன் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் விரைந்து சென்றபோது, ட்ரோன் கீழே இறக்கப்பட்டுவிட்டது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்