UP | டிரைவர் சீட்டில் ஆளே இல்லாமல் ஓடிய கார்...மின்சார காரில் இப்படியும் நடக்குமா..? - வைரல் வீடியோ
#uttarpradesh | #evcar | #viralvideo
டிரைவர் சீட்டில் ஆளே இல்லாமல் ஓடிய கார்... மின்சார காரில் இப்படியும் நடக்குமா..? - வைரல் வீடியோ உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரியில், ஓட்டுநர் இல்லாமலும் காரின் சாவி இல்லாமலும் மின்சார கார் தானாகவே பின்னோக்கி நீண்ட தூரம் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெயின்புரியின் ஜெயில் சாலையில், கார் உரிமையாளர் சௌரப் ரத்தோரின் மருமகன் வீட்டின் வெளியே காரைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் தானாக இயங்கி, அவரைக் கீழே தள்ளிவிட்டு பின்னோக்கி வேகமாகச் சென்றுள்ளது. ஓட்டுநர் இல்லாமல் கட்டுப்பாடின்றிச் சாலையில் சென்ற காரைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். இறுதியில், கார் மண் குவியலின் மீது ஏறி நின்றதுடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கார் மீதும் மோதி சேதத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கார் தானாக இயங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
