வறண்ட சிந்து நதி.. தண்ணீர் பஞ்சத்தில் பாக். - இந்தியாவுக்கு அவசர கடிதம்
வறண்டு காணப்படும் சிந்து நதி - தண்ணீர் பஞ்சத்தில் பாக்.,
பாகிஸ்தானில் சிந்து நதி வறண்டு காணப்படுவதால் உடனடியாக தண்ணீர் திறந்துவிடுமாறு 4வது முறையாக இந்தியாவிற்கு பாகிஸ்தான் அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்த இந்தியா, பாகிஸ்தானுக்கு பகிரப்படும் சிந்து நதிநீரை நிறுத்தியது.
இதனால் பாகிஸ்தானின் ஜம்ஷோரோ பகுதியில் சிந்து நதி முற்றிலும் வறண்டு போய் மணற்பரப்பாக காட்சியளிக்கிறது.
இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒருபக்கம், பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்க, மறுபக்கம், பஞ்சாப் மாகாணம் ஒதுக்கப்பட்ட பங்கை விட அதிகமான தண்ணீரை எடுத்துக்கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது. சிந்து மாகாணத்திற்கு அரசு சார்பில் தண்ணீர் திறக்கப்படவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
இதனிடையே, கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் என்பதால், உடனடியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வந்து தண்ணீர் திறக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசு சார்பில் 4வது முறையாக இந்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
