Dowry Issue | கத்தியுடன் கணவன்.. அழுது புலம்பும் பெண் - வரதட்சணை கொடுமையால் இறந்த மற்றொரு உயிர்..
Kerala Dowry Issue | வரதட்சணை கொடுமையால் இறந்த மற்றொரு உயிர்.. கத்தியுடன் கணவன்.. அழுது புலம்பும் பெண் - பகீர் வீடியோவை காட்டிய பெற்றோர்
ஷார்ஜாவில் வேலைப்பார்த்து வரும் கேரளாவை சேர்ந்த அதுல்யா என்ற பெண், தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார். கேரள மாநிலம் தேவலக்கரையை சேர்ந்த அதுல்யா, சதீஷ் என்பவரை திருமணம் செய்து ஷார்ஜாவில் வசித்து வந்தார்.. சதீஷ் வரதட்சணை கேட்டு அதுல்யாவை உடல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். அதுல்யா தன்னை துன்புறுத்துவதை வீடியோ எடுத்து பெற்றோருக்கும் அனுப்பியுள்ளார். இந்நிலையில் வேலை முடித்து வீட்டிற்கு வந்த சதீஷ், அதுல்யா மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து ஷார்ஜா காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். விசாரணை நடந்து வரும் நிலையில், தனது மகளை அடிக்கும் வீடியோவை பெற்றோர் வெளியிட்டு காவல்துறையில் புகாரளித்தனர். இதனை வைத்து போலீசார் சதீஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
