திடீரென தீ பிடித்து எரிந்த டபுள் டக்கர் பஸ்-அலறி ஓடி வந்த பயணிகள்

x

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மின்சார டபுள் டக்கர் பேருந்தில் தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

மும்பை போக்குவரத்து கழகம் சார்பில், இரட்டை அடுக்கு மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸுக்கு அருகிலுள்ள கோட்டை பகுதியில் சென்றபோது, டபுள் டக்கர் பேருந்தில் தீப்பிடித்தது. பேருந்தில் இருந்து புகை வரத் தொடங்கியதும் பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்தின் இடது பக்க டயருக்கு அருகில் உயர் மின்னழுத்த பேட்டரி அமைப்பின் அருகே தீப்பிழம்புகள் காணப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்