வீட்டுக்கு வீடு குப்பைக்கு வரி - கொந்தளிக்கும் தலைநகர் மக்கள்
டெல்லி மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்ப வெளியிட்டிருக்காங்க. இதுக்கு மேல இலவசமா குப்பைகள் அகற்றக்கூடிய பணி செய்யப்படமாட்டாதுன்னு அறிவிச்ச டெல்லி மாநகராட்சி புது விலை பட்டியலயும் வெளியிட்டிருக்காங்க. உண்மைக்கும் இது புது அறிவிப்பு இல்ல. இதபத்தி கடந்த 2018 ஆம் ஆண்டே சொல்லப்பட்டது. ஆனா இப்ப 7 வருஷதுக்கு அப்பரமா நடைமுறைக்கு வந்திருக்கு
இதுல குடியிருப்பு வாசிகளுக்கான கட்டண பட்டியல்ல 50 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட வீடுகளுக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 50 - 200 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீடுகளுக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அதே போல 200 சதுர மீட்டர்க்கும் மேலான பரப்பளவு கொண்ட வீடுகளுக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்னு அறிவிக்கப்பட்டிருக்கு.
சரி குடியிருப்பு பகுதிகளுக்கு மட்டும் தான் இந்த கட்டணமான்னு கேட்டா அது தான் இல்ல, வணிகர்களுக்கும் உண்டு. அந்த வகையில சாலையோர வியாபாரிகளுக்கு 100 ரூபாய் கட்டணம், கடைகளுக்கு 500 ரூபாய் கட்டணம் அதே போல விடுதிகள், விருந்தினர் மாளிகை, உணவகங்கள் இதுக்கெல்லாம் 2,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கு. இதுமட்டும் இல்லாம ஸ்டார் உணவகங்களுக்கு5,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கு. இதுமட்டும் இல்லாம கல்யாண மண்டபங்கள்,வங்கிகள்,மருத்துவமனைகள்,சிறு குறு நிறுவனங்களுக்கும் குப்பை வரி வசூலிக்கப்பட இருக்கு.
வரியோட மட்டும் இது நிறுத்தப்படல. மக்கும் குப்பை மக்காத குப்பைனு தரம் பிரிச்சு குப்பை கொட்ட சொல்லி எல்லா மாநகராட்சிலயுமே சொல்லி நாம கேள்விபட்டிருக்கோம்லயா. அதே போல தரம்பிரிக்காம குப்பைகளை குடுத்தா அதுக்கு தனியா அபராதம் விதிக்கப்படும்னும் சொல்லப்பட்டிருக்கு. அதுபடி குடியிருப்புவாசிகளுக்கு 200 ரூபாய் அபராதமும்
வணிக நிறுவனங்களுக்கு 10,000 ரூபாய் வரைக்கும் அபராதம் விதிக்கப்படும்னு சொல்லப்பட்டிருக்கு.
டெல்லி மாநகராட்சிக்கு சொத்து வரி வருவாய் பத்துன தரவ பார்த்தா 2022-23 நிதியாண்டுல 2 ஆயிரத்து 417 கோடி ரூபாய். அதுவே 2023-24 நிதியாண்டுல2 ஆயிரத்து 137 கோடி ரூபாய். 2024-25 நிதியாண்டுல2 ஆயிரத்து200 கோடி ரூபாய் கிடைச்சிருக்கு.
இதுல சொத்து வரியோட சேர்த்து வசூலிக்கப்பட இருக்கு குப்பை வரி. இந்த குப்பை வரி மூலமா மட்டும் ஆண்டுக்கு 150 கோடி வருவாய் டெல்லி மாநகராட்சிக்கு கிடைக்கும்னு தகவல் வெளியாகிருக்கு. இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகள் மட்டும் இல்லாம பொதுமக்கள் மத்தியிலயுமே எதிர்ப்ப ஏற்படுத்தியிருக்கு.
