கடிக்க வந்த நாய்களை தடுத்த‌ செக்யூரிட்டி மீது தாக்குதல்

x

மும்பையில் தன்னை கடிக்க வந்த நாய்களை, செக்யூரிட்டி ஒருவர் அடித்த‌தால், அவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் குடியிருப்பு வளாகம் ஒன்றில் செக்யூரிட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தபோது, கழுத்தில் காலர் பொருத்தப்பட்ட நாய்கள் சில சூழ்ந்து கடிக்க முயன்றன. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த செக்யூரிட்டி, கையில் வைத்திருந்த தடியால் நாய்களை விரட்டினார். அப்போது வேகமாக ஓடி வந்த இளைஞர் ஒருவர், நாய்களை அடித்த‌தற்காக செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கினார்.


Next Story

மேலும் செய்திகள்