சிறுவனை சிகரெட் பிடிக்க வைத்த மருத்துவர் - வைரலான பரபரப்பு வீடியோ
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த சிறுவனை, மருத்துவர் சிகரெட் பிடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஜலாபூர் பகுதியில் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக வந்த சிறுவனிடம் அங்கு மருத்துவராக பணியாற்றும் சுரேஷ் சந்து என்பவர், வாயில் சிகரெட்டை வைத்து பற்ற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மருத்துவரின் மீது வழக்கு பதிவு செய்ய உத்தர பிரதேச துணை முதல்வர் உத்தரவிட்ட நிலையில் மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Next Story
