Doctor Attack || செருப்பை வெளியே விட சொன்ன மருத்துவர் - ரகளையில் ஈடுபட்டு தாக்கிய நபர்

x

கர்நாடக மாநிலம், மைசூரில் செருப்பு வெளியே விடும் விவகாரத்தில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் சாத்தகள்ளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக அழைத்து வந்த நபரிடம், காலணியை வெளியே விட்டு வருமாறு மருத்துவர் கூறியுள்ளார். அதற்கு மருத்துவர் மட்டும் உள்ளே காலணி அணிந்து இருக்கலாமா? எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர், மருத்துவரை தாக்கியுள்ளார். மேலும் அந்த நபருடன் வந்த உறவினரும் சேர்ந்து மருத்துவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்