"உங்களுக்கு கன்னடம் தெரியுமா?" - முர்முவிடம் சித்தராமையா கேள்வி

x

“உங்களுக்கு கன்னடம் தெரியுமா?“ - முர்முவிடம் சித்தராமையா கேள்வி

அகில இந்திய பேச்சு மற்றும் கேட்டல் நிறுவனத்தின் வைர விழா மைசூரில் நடைபெற்றது... அதில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது வரவேற்பு உரையை கன்னடத்தில் தொடங்கி, முர்முவைப் பார்த்து புன்னகையுடன் "உங்களுக்கு கன்னடம் தெரியுமா?" என கேட்டார்.. இந்நிலையில், "கன்னடம் எனது தாய்மொழி இல்லையென்றாலும், எனது நாட்டின் அனைத்து மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை நான் மிகவும் மதிக்கிறேன் எனவும், கன்னடத்தை சிறிது சிறிதாக கற்றுக்கொள்ள நிச்சயமாக முயற்சிப்பேன்" என்றும் சிரித்துக் கொண்டே பதிலளித்தார்... கர்நாடகாவில் அனைவரும் கன்னடம் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சித்தராமையா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்