ரொம்ப பழைய கார், பைக் வச்சிருக்கீங்களா? - உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி
இந்தியாவில் பழைய வாகனங்களின் புதுப்பிப்பு கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்தியாவில் மாசு கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வடிக்கட்டப்படாத நச்சு புகையை வெளியிடும் 20 ஆண்டுகள் பழமையான இரண்டு, மூன்று, நான்கு சக்கரம் என அனைத்து வகை வாகனங்களின் புதுப்பிப்பு கட்டணத்தையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பழமையான வாகனங்கள் பயன்படுத்துவதை குறைத்து, பசுமையான பாரதத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
