RCB அணியை பார்த்து DKS விட்ட `வார்த்தை’ - ரசிகர்கள் அதிர்ச்சி
ஆர்.சி.பி அணியை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வாங்கப் போவதாக வெளியான தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தான் 'ராயல் சேலஞ்ச்' மதுவையே குடிக்க மாட்டேன். அப்படி இருக்கும் போது எப்படி ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வாங்குவேன் என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், தான் பல ஆண்டுகளாக கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினராக இருப்பதாகவும், ஆனால் தன்னை நிர்வாக பதவிக்கு அழைத்தால் கூட சென்றதில்லை என கூறியுள்ளார். ஆர்.சி.பி அணி கோப்பையை வென்றபோது, விமான நிலையம் வரை சென்று அணி வீரர்களை வரவேற்ற போது, கையில் ஆர்.சி.பி அணியின் கொடியை டி.கே.சிவக்குமார் ஏந்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
