தீபாவளி, பொங்கல் - இலவச வேட்டி சேலைக்கான தொகை - பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புதல்

தீபாவளி, பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலைக்கான தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
தீபாவளி, பொங்கல் - இலவச வேட்டி சேலைக்கான தொகை - பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புதல்
Published on

தீபாவளி, பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலைக்கான தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக துணை நிலை ஆளுநர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கடந்த தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த பெரியவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் sழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சிவப்பு அட்டை குடும்பதாரர்களுக்கு தலா 900 ரூபாயும், தனியாக உள்ளவருக்கு 450 ரூபாயும் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com