காஷ்மீரை உலுக்கிய பேரழிவு - 46 பேர் பலி.. 200 பேரை காணவில்லை

x

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் உட்பட 45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கிஷ்த்வார் நகரில் உள்ள சோசிட்டி கிராமத்தில் மிகப்பெரிய மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இமயமலையில் உள்ள மாதா சண்டி கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் மேகவெடிப்பு ஏற்பட்டதே உயிரிழப்புகளுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 200 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேக வெடிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட இடத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்து 200 பேர் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பேரழிவு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கமளித்துள்ளதாக காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்