"இனி UPI மூலம் பரிவர்த்தனை செய்ய.." - லிமிட்களில் அதிரடி மாற்றம் - RBI புதிய அறிவிப்பு....

மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். நோயாளிகள் மற்றும் மருத்துவமனைகள் இருவரும் இந்த நடவடிக்கை மூலம் குறிப்பிடத்தக்க வகையில் பயனடைவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளார். சில குறிப்பிட்ட பிரிவுகளை தவிர, யூபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு ஒரு லட்சமாக உள்ளது. இருப்பினும் மியூச்சுவல் ஃபண்ட், இஎம்ஐ, கிரெடிட் கார்டு கட்டணங்களை திருப்பி செலுத்துதல், கடன் திருப்பி செலுத்துவதற்கான யுபிஐ உச்சவரம்பு மட்டும் இரண்டு லட்சமாக உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com