Delhi | தாழ்த்தப்பட்ட சமூகத்தை குறிவைத்து பேசினாரா ஜே.என்.யு துணைவேந்தர்? - கொந்தளித்த மாணவர் சங்கம்
தாழ்த்தப்பட்ட சமூகத்தை குறிவைத்து பேசினாரா ஜே.என்.யு துணைவேந்தர்?
Delhi | தாழ்த்தப்பட்ட சமூகத்தை குறிவைத்து பேசினாரா ஜே.என்.யு துணைவேந்தர்? - கொந்தளித்த மாணவர் சங்கம் #delhi #jnu #thanthitv டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர், சாந்திஸ்ரீ துலிப்புடி(Shantisree Dhulipudi Pandit) வெளியிட்ட கருத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில், துணைவேந்தர் ராஜினாமா செய்ய வேண்டும் என, மாணவர் சங்கம் எதிர்ப்பு தினமாகக் அனுசரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 16-ம் தேதி வெளியான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய பல்கலைகழக துணைவேந்தர், நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டவராக இருப்பதன் மூலமோ, விக்டிம் கார்டு விளையாடுவதாலோ, ஒருவர் முன்னேற முடியாது என கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த கருத்து தாழ்த்தப்பட்ட சமூகத்தை குறிவைத்து பேசியதாக, ஜே.என்.யு மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
