இந்திய விமானங்களை பாக். வீழ்த்தியதா ? - முப்படை தலைமை தளபதியின் பதில்
பாகிஸ்தானால் எத்தனை இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள முப்படைகளின் தலைமை தளபதி அனில் செளஹான், கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும்போது எத்தனை விக்கெட்களை இழந்தோம் என்பது முக்கியமல்ல, வெற்றி பெற்றது தான் முக்கியம் என்ற உதாரணத்தை குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற எதிர்கால போர் மற்றும் போர்க்களம் என்ற கருத்தரங்கில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் செளஹான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்றும், இது தற்காலிக சண்டை நிறுத்தம் தான் எனவும் கூறினார்.
Next Story
