75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என கூறினேனா?-மொத்தமாக போட்டுடைத்த மோகன் பகவத்

x

பாஜக அரசுடன் எந்த மோதலும் இல்லை என RSS தலைவர் மோகன் பகவத் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் RSS அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.அதில் பேசிய RSS அமைப்பின் தலைவரான மோகன் பகவத், "பாஜகவுடன் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், ஒருபோதும் மோதல் இல்லை" என திட்டவட்டமாக கூறினார்."பாஜகவின் முடிவுகளை எடுப்பது ஆர்எஸ்எஸ்" என்ற கூற்று உண்மையல்ல எனவும்.. RSS பரிந்துரைகளை மட்டுமே வழங்குவதாகவும் ஆனால், பாஜகவின் முடிவெடுக்கும் செயல்பாட்டில் ஒருபோதும் RSS தலையிடாது எனவும் அவர் தெளிவுபடுத்தினார். பாஜக தான், நாட்டை வழிநடத்துவதாகவும், அதில் பாஜகவினர் நிபுணர்கள் எனவும் கூறிய மோகன் பகவத்.. தனக்கு 75 வயதானாலும் ஓய்வூதிய பலன்களை அனுபவிக்க வேண்டும் என நானே சொல்ல முடியாது எனவும், சங்கம் சொல்வதை அப்படியே செய்வோம் எனவும் விளக்கினார்.75 வயது ஆனதும் பிரதமர் பதவியில் இருந்து மோடியை விலகும்படி RSS கூறியதாக வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக RSS தலைவரின் இந்த கருத்துகள் அமைந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்