Amardeep Kumar| இந்தியாவுக்காக 4 தங்கம் வென்று தந்தவரா இவர்? - தெருவோரத்தில்.. பரிதாப நிலை

இந்தியாவுக்காக 4 தங்கம் வென்று தந்தவரா இவர்? - தெருவோரத்தில்.. பரிதாப நிலை

இந்தியாவிற்காக சர்வதேச த்ரோபால் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை வென்ற ஜார்க்கண்ட் வீரர் அமர்தீப் குமார், வாழ்வாதாரத்திற்காக ராஞ்சி தெருக்களில் காய்கறி விற்பனை செய்து வரும் அவல சம்பவம் நடந்துள்ளது.... மலேசியா, நேபாளம் மற்றும் தெற்காசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய தங்கம் வென்ற 29 வயதான அமர்தீப், போட்டிகளுக்காக வாங்கிய கடனை அடைக்கவும் குடும்பத்தைக் காப்பாற்றவும் தந்தையுடன் இணைந்து காய்கறி விற்று வருகிறார். பிற மாநிலங்களில் சாம்பியன்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்ட நிலையில், ஜார்க்கண்ட் விளையாட்டுத் துறையிடம் பலமுறை விண்ணப்பித்தும் தனக்கு இதுவரை எந்தவொரு நிரந்தரப் பணியும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்... ஒலிம்பிக் அல்லாத விளையாட்டாக இருப்பினும், நாட்டிற்குப் பெருமை சேர்த்த தங்களைப் போன்ற வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com