Dharmasthala Case | கர்நாடகாவை உலுக்கிய தர்மஸ்தலா வழக்கு.. SIT கொடுத்த 3923 பக்க குற்றப்பத்திரிகை

x

தர்மஸ்தலா வழக்கில் 3,923 பக்க இடைக்கால குற்றப்பத்திரிக்கையை, எஸ்ஐடி தாக்கல் செய்துள்ளது. கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தர்மஸ்தலா பிணங்கள் புதைப்பு வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழு, பெல்தங்கடி கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் இடைக்கால குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. மொத்தம் 3,923 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் முக்கிய சாட்சிகள், விசாரணை தகவல்கள், சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்