பாம்பு போல் நெளிந்து அங்கப்பிரதட்சணம் | குடைகளை ஏந்தியபடி குவிந்த பக்தர்கள்

x

தேஜா தசமி - பக்தர்கள் உற்சாக கொண்டாட்டம்

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் தேஜா தசமி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மேளதாளம் முழங்க வண்ணமயமான குடைகளை கையில் ஏந்தியபடி வீர் தேஜாஜியின் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்தனர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஒரு சில பக்தர்கள் பாம்பு போல் நெளிந்து அங்கப்பிரதட்சணம் செய்தனர். தசமி நாளில் வீர் தேஜாஜியை வழிபட்டால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளிடம் இருந்து தப்பிக்கலாம் என பக்தர்கள் நம்புகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்