திருப்பதி பக்தர்கள் வருகை குறைவால் 2 மணி நேரத்தில் தரிசனம்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை குறைவால், 2 மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடிகிறது.
திருப்பதி பக்தர்கள் வருகை குறைவால் 2 மணி நேரத்தில் தரிசனம்
Published on
திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை குறைவால், 2 மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடிகிறது. ஏழுமலையான் கோவிலின் கும்பாபிஷேகம், வருகிற 16ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக யாக பூஜைகள் தொடங்கி உள்ளன. கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவதால் குறைவான பக்தர்களே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், திருமலையில் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், 2 மணி நேரத்திற்குள்ளாக தரிசனம் செய்ய முடிகிறது. அன்னதான கூடம், தலைமுடி காணிக்கை தரும் இடம் போன்றவற்றில் மிக குறைவான அளவிலேயே பக்தர்கள் காணப்படுகின்றனர். இதனால், நேற்று உண்டியல் வருமானமாக ஒரு கோடியே 15 லட்ச ரூபாய் மட்டுமே வந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com