சரயு நதியில் புனித நீராடி - அயோத்தி ராமரை தரிசித்த பக்தர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி சரயு நதியில் பக்தர்கள் புனித நீராடினார்கள். ஆடி மாத பவுர்ணமியை ஒட்டி அயோத்தியில் திரண்ட மக்கள், நதியில் பால் ஊற்றியும் மலர் தூவியும் இயற்கை அன்னையை வழிபட்டனர். பின்னர், நீண்ட வரிசையில் காத்திருந்து அயோத்தி ராமரை தரிசனம் செய்தனர். இதனிடையே, சரயு நதியில் அதிக அளவில் தண்ணீர் பாய்ந்தோடுவதால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி மிதவைகள் போடப்பட்டிருந்தன. காவல்துறை சார்பில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com