கேரளா கனமழை : பம்பை மலை உச்சிக்கு பக்தர்கள் செல்ல தடை

மகரஜோதி காண பக்தர்கள் குவியும் பம்பை மலை உச்சிக்கு இந்த ஆண்டு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளா கனமழை : பம்பை மலை உச்சிக்கு பக்தர்கள் செல்ல தடை
Published on
மகரஜோதி காண பக்தர்கள் குவியும் பம்பை மலை உச்சிக்கு இந்த ஆண்டு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 14ஆம் தேதி மகரவிளக்கு விழாவையொட்டி சபரிமலையில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பத்தனம்திட்ட மாவட்ட ஆட்சியர் நூஹ் இதனை தெரிவித்தார். சபரிமலையில் பக்தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், பத்தணந்திட்டை மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள், எமர்ஜென்சி ஆபரேஷன் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com