உரம் கிடைக்காத விரக்தி- விவசாயி தற்கொலை முயற்சி

x

உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உரம் கிடைக்காத விரக்தியில் விவசாயி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஷாஜஹான்பூர் கூட்டுறவு சொசைட்டி வளாகத்தில் மின்விசிறியில் அவர் தற்கொலைக்கு முயன்றபோது சக விவசாயிகள் தடுத்து காப்பாற்றினர். கூட்டுறவு சொசைட்டி வளாகத்தில் டிஏபி உரம் வாங்குவதற்காக சென்ற அந்த விவசாயிக்கு உரம் இருப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தி அவர், இந்த விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்