வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மிகத்தீவிர புயலாக கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது தீவிர காற்றழுத்த பகுதியாக மாறி, கிழக்கு மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மிகத்தீவிர புயலாக கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மிகத்தீவிர புயலாக கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது தீவிர காற்றழுத்த பகுதியாக மாறி, கிழக்கு மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.மேலும் இது, வடக்கு நோக்கி நகர்ந்து, வடமேற்கு பகுதியை நோக்கி சென்று தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் வலுபெற்று அதிதீவிர புயலாக மாறவுள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் மேற்கு வங்க மாநிலம் மற்றும் வட ஒடிசா மாநிலங்களுக்கு இடையே வடமேற்கு வங்க கடலில் நிலை கொண்டு, பின்னர் வரும் 26 ஆம் தேதி பாரதீப், சாஹர் தீவுகளுக்கும் இடையே மிகத்தீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com