ஸ்விஸ் வங்கி முதலீடு அதிகரிப்பு விவகாரம் - ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பு

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் கறுப்புப் பணம் இதுவரை இல்லாத அளவுக்கு, தற்போது அதிகரித்து உள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது
ஸ்விஸ் வங்கி முதலீடு அதிகரிப்பு விவகாரம் - ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பு
Published on

ஸ்விஸ் வங்கி முதலீடு அதிகரிப்பு விவகாரம் - ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பு

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் கறுப்புப் பணம் இதுவரை இல்லாத அளவுக்கு, தற்போது அதிகரித்து உள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.2020 ம் ஆண்டு இறுதியில் ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 20 ஆயிரத்து 700 கோடியாக உயர்ந்து இருப்பதாகவும் , இது 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமென ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை மத்திய அரசு மறுத்துள்ளது. ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் அதிகரிப்பு அல்லது குறைவு குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் ஸ்விஸ் வங்கி இடம் தகவல் கேட்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் சுவிஸ் வங்கியில் உயர்ந்திருப்பதாக கூறப்படும் வந்த பணம் இந்தியர்கள் உடையதா அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள் உடையதா அல்லது மூன்றாம் நாடுகளிலுள்ள இந்திய நிறுவனங்கள் உடையதா தான் என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை என மத்திய நிதி அமைச்சகம் அதில் சுட்டிக்காட்டி உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள இந்திய நிறுவனங்களின் வர்த்தக பரிமாற்றம் காரணமாக இந்த டெபாசிட் உயர்வு ஏற்பட்டிருக்கலாம் என்றும், இந்தியாவில் உள்ள ஸ்விஸ் வங்கிகளின் வர்த்தகம் காரணமாகவோ ஸ்விஸ் வங்கி மற்றும் இந்திய வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகளின் காரணமாகவோ ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com