குடியிருப்புகள் அகற்றம் - டெல்லியில் வாழ்வுரிமைக்காக போராடும் தமிழர்கள்

x

Delhi Protest || குடியிருப்புகள் அகற்றம் - டெல்லியில் வாழ்வுரிமைக்காக போராடும் தமிழர்கள்

தமிழர்களின் மதராஸ் முகாமை அகற்ற முயற்சி - அரசுக்கு எதிராக போராட்டம்

டெல்லி ஜங்புராவில், தமிழர்கள் வாழும் பகுதியான மதராசி முகாமை, காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 60 ஆண்டுகளாக வாக்காளர் அட்டைகளுடன் தமிழர்கள் வாழ்ந்து வரும் இந்த பகுதியை, முழுமையாக இடிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இங்கு 500 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சுமார் 190 குடும்பங்களுக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதுவும் 45 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள நரேலா என்ற பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், தங்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி, குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படும் என கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வீடுகள் இன்றி தவிக்கும் அனைவருக்கும், வீடுகளை ஒதுக்கி வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்