கலவர பகுதிகளில் அஜித் தோவல் ஆய்வு : காவல்துறை அதிகாரிகளிடம் நிலவரத்தை கேட்டறிந்தார்

டெல்லியில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று மாலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கலவர பகுதிகளில் அஜித் தோவல் ஆய்வு : காவல்துறை அதிகாரிகளிடம் நிலவரத்தை கேட்டறிந்தார்
Published on
டெல்லியில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று மாலை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அமைதியை நிலைநாட்டும் பொறுப்பில் ஈடுபட்டுள்ள அஜித் தோவல், அங்கு ஆய்வு மேற்கொண்டதோடு, தற்போதைய நிலவரம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், காவல்துறையினர் தங்களது பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளை அஜித் தோவல் கேட்டறிந்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com