டெல்லி JNU பல்கலை.யில் பதற்றம்...ABVP Vs கம்யூனிஸ்ட் மாணவர்கள்...கொலைவெறி தாக்குதல்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின், தேர்தல் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக, அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் மற்றும் இடதுசாரி ஆதரவு குழுக்களின் மாணவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மோதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ டி பண்டிட் தெரிவித்துள்ளார். நேற்றிரவு மோதலில் காயமடைந்த சில மாணவர்கள், சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாக்கிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
