டெல்லி நியூ ஃப்ரெண்ட்ஸ் காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவருக்காக புனேவில் இருந்து இருதயம் கொண்டு வர திட்டமிட்டப்பட்டது.டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் தனியார் மருத்துவமனைக்கு சென்றடைய தில்லி போக்குவரத்து காவல் துறையினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில் புனேவில் இருந்து விமானத்தில் வந்த இருதயம், ஆம்புலன்ஸ் மூலம் சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு 21 நிமிடங்களில் வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டது.