Delhi | Police | Misssing | டெல்லியில் 800க்கும் மேற்பட்டோர் மாயம்? - காவல்துறை மறுப்பு
டெல்லியில் 800க்கும் மேற்பட்டோர் மாயம்? - காவல்துறை மறுப்பு
Delhi | Police | Misssing | டெல்லியில் 800க்கும் மேற்பட்டோர் மாயம்? - காவல்துறை மறுப்பு டெல்லியில் 800க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அதிர்ச்சித் தகவல் வெளியான நிலையில், டெல்லி காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. டெல்லியில் கடந்த 15 நாட்களில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும், இவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி காவல்துறை, பணம் பெற்றுக் கொண்டு பிரமோஷனுக்காக போலி செய்திகளை பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக பரப்பப்படும் எந்தவிதமான வதந்திகளிலும் கவனம் செலுத்த வேண்டாம் என்றும், வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
