

பிரதமர் மோடி பல்வேறு தருணங்களில் பெற்ற பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து பிரதமரின் பிறந்த நாளான இன்று முதல் அவர் பெற்ற பரிசுகளை மின்னணு-ஏலத்தில் விடும் நிகழ்ச்சியை மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் நடத்துகிறது.ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் அளித்த விளையாட்டு சாதனங்கள், அயோத்தி ராமர் கோயில், சர்தாம், சிற்பங்கள், ஓவியங்கள், அங்கவஸ்திரங்கள் உட்பட பல பொருட்கள் உள்ளன.இந்த மின்னணு ஏலம் மூலம் கிடைக்கும் பணம், கங்கை நதியை பாதுகாக்கும் மற்றும் புதுப்பிக்கும் நமாமி கங்கை திட்டத்துக்கு வழங்கப்படவுள்ளது.இந்த மின்னணு-ஏலத்தில் பங்கேற்கும் நபர்கள் இணையதளம் மூலம் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.