டெல்லி = சிறுவனை கடித்து குதறிய 'பிட்புல்' நாய்
தாக்கியதில் சிறுவனின் வலது காது கிழிந்தது.வட மேற்கு டெல்லியில் உள்ள பிரேம் நகர் எனும் பகுதியில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 06 வயது சிறுவனை புட்புல் நாய் ஒன்று கொடூரமாக தாக்கியது.சிறுவன் பந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது அதே தெருவில் பக்கத்து வீட்டினர் வளர்த்து வரும் புட்புல் நாய் நின்று கொண்டிருக்கும் பகுதிக்கு அருகே சென்று பந்து விழுந்தது.சிறுவன் பந்தை எடுக்க சென்றபோது திடீரென பக்கத்தில் நின்று கொண்டிருந்த நாய் சிறுவனின் மீது பாய்ந்தது.நாயைக் கண்டு அஞ்சிய சிறுவன் ஓடியபோதும் நாய் விடாமல் துரத்திய நிலையில் கீழே விழுந்த சிறுவனின் மீது பாய்ந்த பின்புள்ளாய் சிறுவனின் உடல் முழுவதும் கடித்துக் குதறியது.இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் நீண்ட நேரம் போராடி நாயின் பிடியிலிருந்து சிறுவனை விடுவித்தன.நாயின் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சிறுவன் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்நாய் கடுமையாக தாக்கியதில் சிறுவனின் பின்னந்தலையில் 8 முதல் 10 வரை ஆழமான காயம் ஏற்பட்டுள்ள நிலையில் சிறுவனின் வலது முற்றிலும் கிழிந்துள்ளது.சிறுவனின் முகத்திலும் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது சிறுவனின் பல் உடைந்துள்ளது.இந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது நிலையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் நாயின் உரிமையாளர் ராஜ் பால் என்பவரை கைது செய்துள்ளனர்.சிறுவனை தாக்கி கடித்த அதிக நாள் அதே பகுதியில் ஏற்கனவே நான்கு குழந்தைகளை தாக்கி இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
