

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக துணை வேந்தர் பதவி விலகினால் மட்டுமே நீதி கிடைக்கும் என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் துணையில்லாமல் வன்முறை நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடந்த சம்பவங்களை மறக்க வேண்டும் என துணை வேந்தர் சொல்வதாகவும், பல்கலைக் கழகம் பாதுக்காப்பாக இல்லாத போது மாணவர்களால எப்படி வகுப்பறைக்கு செல்ல முடியும்? என்றும் அதில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் கல்வி நிலையங்களை காக்க வலியுறுத்தியும் நாளை நடைபெற உள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பேராசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.