

டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காணொலி மூலமாக
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனா விதிமீறல் வழக்குகள் அதிகரித்து வருவதால், டெல்லி மக்களுக்கு இது கடினமான நேரம் என்று குறிப்பிட்டார். எனவே, அடுத்தகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியே நடமாடும் போது, முக கவசம் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். ஏற்கெனவே இந்த அபராத தொகை 500 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.