டெல்லியில் கூடிய INTERPOL அலுவலர்கள்

இண்டர்போல்' தொடர்பு அலுவலர்களின் பத்தாவது மாநாட்டை டெல்லியிலுள்ள சிபிஐ தலைமையகத்தில், மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் இன்று தொடங்கி வைத்தார். சர்வதேச எல்லைகளை கடந்து, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செய்யப்படும் சைபர் குற்றங்களை தடுக்க, சர்வதேச அளவில் போலீஸ் கூட்டுறவு அவசியம் தேவை என்றார். போலீஸ்  கூட்டுறவுக்கான ஐநா சர்வதேச நாளை முன்னிட்டு சிபிஐ சார்பில் சர்வதேச போலீஸ் கூட்டாண்மையை வலுப்படுத்தல் என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com