Delhi High Court | நாளை சுதந்திர தினம் - இன்று டெல்லி ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..

Delhi High Court | நாளை சுதந்திர தினம் - இன்று டெல்லி ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..

நாளை சுதந்திர தினம் - இன்று டெல்லி ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பல மணி நேர சோதனைக்கு பிறகு தெரிய வந்த விஷயம் நாளை சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, டெல்லி போலீசார், மோப்ப நாய் படை மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்காததால், மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நீதிமன்றப் பணிகள் வழக்கம்போல் நடைபெற்றன. மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பிய மர்ம நபரை கண்டறிய, டெல்லி போலீசார் சைபர் கிரைம் பிரிவு மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com