

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரது பொறுப்புகள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சத்யேந்திர ஜெயினுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பிற துறைகளும், துணை முதல்வரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.