

டெல்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா காரணமாக இழப்பீட்டு தொகையில் ஏற்பட்டுள்ள இடைவெளி இந்த ஆண்டு 2.35 லட்சம் கோடியாக இருக்கும் என்றார். அதே சமயம், ஜிஎஸ்டி அமலாக்கத்தின் காரணமாக ஏற்படும் இழப்பீடு 97 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ரிசர்வ் வங்கியோடு கலந்துபேசி குறைந்த வட்டியில் 97 ஆயிரம் கோடி நிதியை, மாநிலங்களுக்கு வழங்குவது என்றும், இதனை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரியிலிருந்து கட்டிக் கொள்ளலாம் என்கிற வாய்ப்பையும் வழங்க உள்ளதாகவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.