"அரசின் திட்டம் குறித்து நண்பகலில் பரிசீலித்து முடிவு" - விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தகவல்

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
"அரசின் திட்டம் குறித்து நண்பகலில் பரிசீலித்து முடிவு" - விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தகவல்
Published on

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 14-வது நாளை எட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை விவசாய சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், இன்று பிற்பகல் விவசாயிகளுடன் அரசு பேச்சுநடத்த உள்ளது. இந்நிலையில், நேற்று 34 விவசாய சங்க நிர்வாகிகளுடன், உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதில் அரசின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துரைக்கப்பட்ட நிலையில், அதனை ஏற்க விவசாயிகள் சங்கம் ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஹன்னா மொல்லா, இன்று மதியம் 12 மணிக்கு சிங்கு எல்லையில் விவசாய சங்கங்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார். அரசு 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் நிலையில் இல்லை என்றும், அதனால் அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவது சாத்தியமில்லை என ஹன்னா மொல்லா தெரிவித்துள்ளார். அரசு ஒரு திட்டத்தை இன்று தரும் என அமைச்சர் தெரிவித்ததாகவும், அதுதொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகள் கூடி முடிவு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com